கவிச்சோலை
பீரங்கிகளைத் தகர்த்த பேனா !!
எழுத்தாளனின் ஓர் பேனா முனை
சிந்தனைகளை கொண்டுச் செல்லும் ஏவுகணை
அது மனதை தாக்கும் ரசாயனவினை
இது எழுப்பும் பல எழுச்சியினை !
இது மனங்களில் செய்யும் யுத்தகாண்டம் !
பிற உயிர்களைக் கொல்லா பலிபீடம்
நகரங்களைத் தகர்க்காத சக்தி பீடம்
அதனால் பீரங்கிகள் தகரும் பேனாமுனையிடம்
NITT-ன் “NITTFEST’25” கலைத்திருவிழாவில், கவிச்சோலை போட்டியில், “பீரங்கிகளைத் தகர்த்த பேனா” என்ற தலைப்பிற்காக எழுதப்பட்டது. என்னுடைய முதல் கவிதை :) அதனால் பரிசு எதுவும் பெறவில்லை.